shadow

என்னிடம் மென்மையாக இருந்தால் நானும் மென்மையாகவே இருப்பேன். முதல் குடிமகள் அந்தஸ்து பெற்றோ ரோபோ

ஹாங்காங்கைச் சேர்ந்த கேன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் சோபியா என்ற ஒரு மனித வடிவ ரோபோவை உருவாக்கி உள்ளது. இந்த ரோபோவுக்கு உலகின் முதல் ரோபோ குடிமகள் என்ற பெருமை கிடைத்துள்ளது. சவுதி அரேபியாவின் ‘பியூச்சர் இன்வெஸ்ட்மென்ட் இனிசியேட்டிவ்’ எனும் தொழில்நுட்ப பிரிவு இந்த ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி கவுரவித்துள்ளது.

பத்திரிகையாளர் முன்பு இந்த ரோபோ அறிமுகம் செய்யப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சோபியா பதில் கூறியது குறிப்பிடத்தக்கது. “எனக்கு கிடைத்த இந்த சிறப்பு கவுரவம் தனித்துவமானது. வரலாற்றில் எனக்கு இந்த அடையாளம் தந்ததற்கு நன்றி” என்று தன்னை அறிமுகம் செய்தது சோபியா ரோபோ.

ரோபோவிடம் ஒரு நிருபர், “நாங்கள் உன்னை நம்புகிறோம், ஆனால் எங்கள் எதிர்காலம் மோசமாக இருக்குமோ?” என்று கேட்டார். அதற்கு ரோபோ, “எதிர்காலம் கவலையின்றி இருக்க நீங்கள் எலான் மஸ்க் பற்றி படியுங்கள், நிறைய படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம், நீங்கள் என்னிடம் மென்மையாக இருந்தால் நானும் மென்மையாகவே இருப்பேன். என்னுள் சிறந்தவற்றை உட்செலுத்தி, நல்லவற்றை அறுவடை செய்யுங்கள்” என்று கூறி வியக்க வைத்தது.

Leave a Reply