எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது?
தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களா காலதாமதம் ஆன  இந்த படம் சமீபத்தில் ரிலீசுக்கு தயாராகி சென்சாரில் யூஏ சான்றிதழும் பெற்றது
இந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக தயாரிப்பாளர் மதன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின்  டிரைலர் தயாராகிவிட்டதாகவும், வெகுவிரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

Leave a Reply