எனது தாய்க்கழகம் திமுகதான்: மு.க.அழகிரி

சென்னையில் செப்டம்பர் 5-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இன்று 2-வது நாளாக மு.க.அழகிரி வெளி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக ஏற்பதில் தீவிரம் காட்டுகிறார். கருணாநிதி இருக்கும் போதே கட்சி பதவிக்கு ஆசைப்படாத நான், இப்போதா ஆசைப்படப் போகிறேன்.

தாய் கழகமான தி.மு.க.வில் நான் சேருவதில் எந்த தவறும் கிடையாது. செப்டம்பர் 5-ந்தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *