எனக்கும் நடிகர் சங்க தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை: கையை விரித்த கவர்னர்!

நேற்று விஷால் அணியினரும், இன்று பாக்யராஜ் அணியினர்களும் தமிழக கவர்னரை சந்தித்துள்ள நிலையில் இன்று பேட்டியளித்த ஐசரி கணேஷ், ‘கவர்னர் மிகத்தெளிவாக எனக்கும் இந்த தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டார். பதிவாளர் முறைப்படிதான் செய்துள்ளார். தேர்தல் நடக்கும்போது பாதுகாப்பு கேட்டால் கண்டிப்பாக பாதுகாப்பு கொடுப்போமென்று கவர்னர் கூறியதாக ஐசரி கணேஷ் கூறியுள்ளார்.

மேலும் தேர்தலை நடத்த சரியான வழிமுறைகளை நடிகர் சங்கம் செய்யவில்லை என்றும், விஷால் அணியினர் பொய்களை சொல்லி வருவதாகவும் கூறிய ஐசரி கணேஷ், நீதிபதி பத்னநாபன் மேற்பார்வையில் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்றும் அவரை நிச்சயம் மாற்றியே ஆகவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றும் ஐசரி கணேஷ் மேலும் தெரிவித்தார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *