எந்த புதுதோசையையும் சந்திரபாபு நாயுடு சுடவில்லை: தமிழிசை

பாஜகவுக்கு எதிராக மத்தியில் மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது:

சந்திரபாபுநாயுடு, ஸ்டாலினைச் சந்தித்துவிட்டார், அதற்கு முன்னால் தேவகவுடாவைச் சந்தித்துவிட்டார், ராகுலைச் சந்தித்து விட்டார்.. மிகப்பெரிய கூட்டணியை அமைத்துவிட்டார் என்கின்றனர். எந்த புதுதோசையையும் சுடவில்லை, ஏற்கனவே எதிரணியாக.. இருக்கும், ஒருதோசையை..பிய்த்து..பிய்த்து.. சாப்பிடுகிறார், அவ்வளவுதான்..

ஜனநாயகத்தைக் காப்பாற்றப்போகிறேன்.. பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பவர்களை.. எதிர்க்கிறேன்.. என்று..சொல்கிறார் சந்திரபாபுநாயுடு…..அவசரநிலைப் பிரகடனப்படுத்தி… ஜனநாயகத்தைக் கொன்று…பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கிய…காங்கிரசுடன் இருந்துகொண்டு சொல்வது மிகப்பெரிய வேடிக்கை.

4 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக கூட்டணியில் இருந்தவர் வரவு சிலவுக்காக புது கூட்டணி தேடிவருகிறார். ஏற்கனவே பழக்கப்பட்ட 4 ஆண்டு சாப்பிட்டு விட்டு ,பிடிக்கவில்லை என சொல்லி புது ஓட்டல் தேடுகிறார்? ஒரு டீக்கடையில் பாக்கி வைத்துவிட்டு அடுத்த டீக்கடைக்கு போவதைப்போல்!.. ஸ்டாலின் மகிழ ஒன்றுமில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *