எந்த சோதனையாலும் எங்களை பணியவைக்கமுடியாது: திவாகரன்

இந்தியா முழுவதையும் பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா குடும்பத்தினர்களின் மீதான வருமான வரிச்சோதனை நடவடிக்கையின் ரிசல்ட் என்ன என்பதை அறிய நாட்டு மக்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கையில் எந்தவிதமான சோதனையாலும் எங்களை பணியவைக்கமுடியாது என்றும், எங்கள் பிணத்தை மட்டுமே பணிய வைக்க முடியும் என்றும் கெத்தாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் திவாகரன்

நேற்று செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் மேலும் கூறியதாவது: இந்தியாவிலேயே மிகப்பெரிய சோதனை எங்கள் குடும்பத்தில்தான் நடைபெற்றது, அதுவும் மிகப்பெரிய தோல்வியில் முடிவடைந்தது. இதுபோன்ற எந்த சோதனையாலும் எங்களை பணியவைக்கமுடியாது. எங்கள் பிணத்தைதான் பணியவைக்கமுடியும்.

வருமானவரித்துறை சோதனைகள் குறித்து அந்த துறையின் அதிகாரிகள் பதில் ஏதும் கூறாத நிலையில் சமூக வலைதலங்களில் வரும் தகவல்கள் பொய்யானது’ என்று திவாகரன் கூறியுள்ளார்.

வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் இதுவரை இந்த சோதனை குறித்தும், கைப்பற்றப்பட்ட ரொக்கம், ஆவணங்கள் குறித்தும் எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *