எதை எதை குறைத்தால் இளமையாக வாழலாம்: ரஜினிகாந்த அறிவுரை

ஒரு சிலவற்றை குறைத்தால் எந்த வயதிலும் இளமையாக வாழலாம் என்றும் அவற்றின் ரகசியத்தை இப்போது சொல்கிறேன் என்றும் நேற்று நடைபெற்ற தர்பார் புரமோஷன் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்

அனைத்து வயதிலும் இளமையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டுமென்றால் ஒரு சிலவற்றை கண்டிப்பாக குறைக்க வேண்டும் என்று கூறிய அவர் ஆசை, கவலை, உணவு, தூக்கம் மற்றும் பேச்சு ஆகியவற்றை குறைத்துக் கொண்டால் நிச்சயம் எனர்ஜியாகவும் நிம்மதியாகவும் வாழலாம் என்றும் அவர் தெரிவித்தார்

நம்முடைய பல பிரச்சனைகளுக்கு இவை அதிகமாக இருப்பதே காரணம் என்று அவர் கூறியுள்ளதை பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் இனி ரஜினி கூறிய அறிவுரையை பின்பற்ற இருப்பதாகவும் கூறி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *