shadow

எக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: மு.க.அழகிரி வேண்டுகோள்

நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி, எம்ஜிஆர் பெயரை வைத்த நிலையில் எக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வேன்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முக அழகிரி எழுதிய கடிதத்தில் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பெயரை சூட்டி பெருமை படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்

இதுபோல் சென்னை எழும்பூர் ரயில் முனையத்திற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பெயரை சூட்டிட வேண்டுமென எனது அன்புக்கோரிகையை தங்களிடம் வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply