உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அறுவை சிகிச்சை: மருத்துவமனையில் அனுமதி!

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷாவுக்கு குஜராத் மருத்துவமனையில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அகமதாபத்தில் உள்ள குசும் தீரஜ்லால் மருத்துவமனையில் அமித்ஷா இன்று காலை 9 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு சிறிய அளவு மயக்கமருந்து கொடுத்து பின் கழுத்தில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமித்ஷா தற்போது பூரண நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *