உளவுத்துறையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான தகவல்

உளவுத்துறையில் வேலை செய்ய வேண்டும் என்பது ஒருசிலரது கனவாக இருக்கும். அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த செய்தி இதோ:

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1054 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இணையதளத்தின் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்- அக்டோபர் 20, 2018
ஆன்லைன் விண்ணப்பம் நிறைவு- நவம்பர் 10, 2018
விண்ணப்ப கட்டணம் செலுத்துவற்கான கடைசி நாள்- நவம்பர் 10, 2018

விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவு மற்றும் ஒபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 50 கட்டணம்.
எஸ்.சி/ எஸ்.டி, முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை

வயது வரம்பு

பொதுப்பிரிவினர்- 27 வயது வரை
எஸ்சி/ எஸ்டி பிரிவினர்- 32 வயது வரை
ஒபிசி- 30 வயது

மேலும் விவரங்களுக்கு (www.mha.gov.in) or (www.ncs.gov.in) என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *