உலகின் மிக அழகான 30 பெண்கள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை ஹாலிவுட் பஸ் என்ற இணையதளம் சமீபத்தில் எடுத்தது. அந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இரண்டு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இத்தாலியை சேர்ந்த ஹாலிவுட் நடிகை மோனிகா பெலுச்சி உலகின் மிக அழகான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 49 ஆகும்.

இரண்டாவது இடத்தை அமெரிக்க நடிகை கேட் அப்டன் அவர்களும், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யாராய்க்கு 4 வது இடமும், மற்றொரு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு 29வது இடமும் கிடைத்துள்ளது.

இவர்கள் அனைவரும் ஹாலிவுட் பஸ் என்ற இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

Leave a Reply