shadow

உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குக்களில் ‘2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கோலிவுட் திரையுலக வரலாற்றில் இதற்கு முன் எந்த தமிழ்ப்படமும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானதில்லை என்றே கூறப்படுகிறது. ரஜினி நடித்த ‘தளபதி’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல்முறையாக 100 திரையரங்குகளிலும், சிவாஜி’ திரைபடம் உலகம் முழுவதும் முதல்முறையாக 1000 திரையரங்குகளிலும் வெளீயாகி சாதனை செய்த நிலையில் தற்போது அவரது படம் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply