shadow

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா போராடி தோல்வி

கடந்த சில நாட்களாக உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இரண்டு காலிறுதி போட்டிகளும் முடிவடைந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. நேற்று நடைபெற்று ஒரு காலிறுதி போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்திடம் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது

நேற்று நடைபெற்ற ஆட்டத்டில் இந்திய வீரர்கள் கோல் போட கடுமையாக போராடினர். ஆனால் நெதர்லாந்து வீரர்களின் தடுப்பு ஆட்டம் ஆடியதால் கடைசி வரை ஒரே ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது. ஆனால் நெதர்லாந்து அணியினர் அதிரடியாக இரண்டு கோல்கள் போட்டு 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றனர். இதன்மூலம் நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. அதேபோல் நடைபெறவுள்ள இன்னொரு அரையிறுதியில் இங்கிலாந்து அணி பெல்ஜியம் அணியுடன் மோதும்

 

Leave a Reply