உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளது. இந்த நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இந்த டாஸில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது

இன்னும் சிறிது நேரத்தில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஏற்கனவே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியிருக்கும் நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதால் அந்த அணி இன்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

இருப்பினும் சேஸிங்கில் இங்கிலாந்து அணி நிபுணர்கள் என்பதால் இன்றைய போட்டியில் 300க்கும் குறைவான ரன்களுக்குள் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்தினால் அந்த இலக்கை இங்கிலாந்து அணி மிக எளிதில் பெற்று கோப்பையை கைப்பற்றும் என்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்

இன்னும் சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பிக்க உள்ள நிலையில் இன்று இரவுக்குள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும் அது வரை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *