உலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ், உருகுவே காலிறுதிக்கு தகுதி: பரிதாபமாக வெளியேறிய அர்ஜெண்டினா

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் நேற்று முதல் நாக் அவுட் சுற்றுக்கள் ஆரம்பமாகின. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பிரான்ஸ் 4-3 என்ற கோல்கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. மெஸ்ஸியின் மாயாஜாலம் நேற்று எடுபடாததால் அர்ஜெண்டினா பரிதாபமாக வெளியேறியது

அதேபோல் இன்னொரு நாக் அவுட் போட்ட்யில் உருகுவே மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த போட்டியில் உருகுவே அணி போர்ச்சுக்கல் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

எனவே வெற்றி பெற்ற பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் காலிறுதியில் வரும் 6ஆம் தேதி மோதும். இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *