உலகக்கோப்பை கால்பந்து போட்டி: பிரேசில், நைஜீரியா, சுவிஸ் நாடுகள் வெற்றி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலககோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் பிரேசில், நைஜீரியா, சுவிஸ் ஆகிய நாடுகள் வெற்றி பெற்றன

முதல் ஆட்டத்தில் செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதியது. இந்த போட்டியில் சுவிஸ்2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

இரண்டாவது போட்டியில் நைஜீரியா, ஐஸ்லாந்து அணிகள் மோதியது. இந்த போட்டியில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டியில் பிரேசில் மற்றும் கோஸ்டாரிகா அணிகள் மோதியது. இந்த போட்டியில் பிரேசில் அணி 2-0 என்ற கோல்கணக்கில் கோஸ்டாரிகாவை வீழ்த்தியது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *