Chennai Today News

உலகக்கோப்பை கால்பந்து: இன்று காலிறுதி, வெற்றி பெறும் அணி எது?

உலகக்கோப்பை கால்பந்து: இன்று காலிறுதி, வெற்றி பெறும் அணி எது?

உலகக்கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் போட்டிகள், நாக் அவுட் போட்டிகள் முடிந்து இன்று முதல் காலிறுதி போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது.

முதல் காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவே அணியுடனும், இரண்டாவது போட்டியில் பிரேசில் அணி பெல்ஜியம் அணியுடனும் மோதுகிறது. இதில் பிரேசில், பெல்ஜியம் அணிகளின் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் வெற்றி வாய்ப்பை பொருத்தவரையில் பிரேசிலின் கை சற்று ஓங்கி இருந்தாலும் பெல்ஜியத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!