Chennai Today News

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ்

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முதல் அரையிறுதி ஆட்டம் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு ஆரம்பமான முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் ஆக்ரோஷமாக மோதி கோல் போட முயற்சித்தன. ஆனால் இரு நாட்டு அணியின் கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்திஅயதால் முதல் பாதியின் இறுதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் 0 – 0 என சமநிலையில் இரு அணிகளும் இருந்தன.

இந்த நிலையில் இரண்டாவது பாதி ஆரம்பமானதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். அதன்பின்னர் இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!