shadow

உண்மையில் திமுக தான் பாசிச கட்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

சமீபத்தில் சோபியா என்ற மாணவி, பாஜக கட்சியை அக்கட்சியின் தமிழக தலைவர் முன் பாசிசி கட்சி என்று கோஷம் போட்டதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு சோபியாவுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறியபோது, ‘பாஜகவை விமர்சிக்கும் திமுகதான் பாசிசக் கட்சி என்று காட்டமாக தெரிவித்தார். திமுகவின் தலைவரான பிறகு ஸ்டாலின் கூறி வரும் கருத்துகள் அனைத்தும் பொருத்தமற்றவையாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு கோதாவரியில் இருந்து 2000 டிஎம்சி தண்ணீர் கொண்டு வர மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாகவும், காவிரி நீர் கடைக்கோடி வரை சென்று சேர்வதற்கான திட்டங்களுக்கு தமிழக அரசு கோரினால் மத்திய அரசு உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply