உடுமலை சங்கர் படுகொலை: கவுசல்யா தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு

தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், ஐந்தாவது குற்றவாளியான மணிகண்டன், ஆறாவது குற்றவாளியான செல்வகுமார், ஏழாவது குற்றவாளியான கலை தமிழ்வாணன், எட்டாவது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9-ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11-ஆவது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும் பிரசன்னா குமார் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *