உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ் – மிளகு சூப்

முட்டைக்கோஸ் – 200 கிராம்
கேரட் – 1
வெங்காயம் – 2
சோள மாவு – 1/2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை :

முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளான முட்டைக்கோஸ், கேரட் மற்றும் வெங்காயம் சேர்த்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், குக்கரில் உள்ளவற்றை வாணலியில் ஊற்றி, [பாட்டி மசாலா] மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் – மிளகு சூப் ரெடி!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *