shadow

ஈரான் – ஈராக் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 400ஐ தாண்டியது

நேற்று ஈரான், ஈராக் நாடுகளின் எல்லையில் நிகழ்ந்த நிலநடுக்கத்திற்கு 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாகவும், சுமார் 6ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

அடிக்கடி நிலநடுக்கத்திற்கு ஆளாகும் ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லைப்பகுதியான ஜக்ரோஸ் மலைப்பிரதேசத்தில் நேற்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியே சீர்குலைந்தது. பூமிக்கு அடியில் 23.2 கிலோ மீட்டர் ஆழத்தில் 31 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 புள்ளியாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தவுடன் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோரை அழைத்துக்கொண்டு அலறியடித்தவாறு வீடுகளை விட்டு வெளியே ஓடினர். எனினும் பலத்த நில அதிர்வு காரணமாக 10 கிராமங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது.

ஈரானின் சர்போல் -இ ஜகாப் என்ற சிறுநகரம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. அங்குள்ள 2 மருத்துவமனைகளும் பலத்த சேதம் அடைந்ததால் நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply