இஸ்ரேலை அழிக்க யுரேனியம் தயார் செய்கிறது ஈரான்: பிரதமர் குற்றச்சாட்டு

இஸ்ரேலை அழிக்க ஈரான் நாள்தோறும் யுரேனியம் உற்பத்தி செய்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகூ குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இஸ்ரேல் யுரேனியம் தயாரிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் பொய் சொல்லி வருவதாகவும், இஸ்ரேலை அழிக்க ஈரான் நாள்தோறும் யுரேனியம் உற்பத்தியை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஈரான் தனது ராணுவத்தை பயன்படுத்தி சிரியாவை ஆக்கிரமிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், உலக நாடுகளை அச்சுறுத்தும் ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை, இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *