இஷாந்த் ஷர்மா அபார பந்துவீச்சு: மே.இ.தீவுகள் அணி திணறல்

இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதால் மே.இதீவுகள் பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுக்களையும் பும்ரா, ஷமி, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் மே.இ.தீவுகள் அணி இந்தியாவை விட 108 ரன்கள் முதல் இன்னிங்ஸில் பின் தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *