இவர்கள் நாட்டில் வாழ தகுதி அற்றவர்கள்: ஐஸ்வர்யா தத்தா ஆவேசம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தின் குற்றவாளிகள் நாட்டில் வாழ தகுதி அற்றவர்கள் என்று பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி பாலியல் சம்பந்தமான ஒருசில வீடியோக்களை நான் பார்த்தேன். அதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இந்த ஜெனரேசன் மக்கள் நட்பை தவறாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரு விஷயத்தை அவர்கள் யோசிப்பதில்லை. அவர்களுக்கும் அம்மா, அக்கா, தங்கைகள் உள்ளனர்.

பொதுவாக எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் ஓரிரண்டு மாதம் ஜெயிலுக்கு சென்றுவிட்டு பின் மீண்டும் வெளியே வந்து அதே தவறை செய்கின்றனர். இந்தியன் போலீஸ் என்றாலே குற்றவாளிகளுக்கு ஒரு பயமில்லாமல் போய்விட்டது.

எனவே தயவுசெஞ்சு இந்த மாதிரி குற்றவாளிகளை சிறையில் அடைத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். அவர்களை வெட்டி சாகடியுங்கள், இவர்கள் நாட்டில் வாழ தகுதி அற்றவர்கள்

இவ்வாறு ஐஸ்வர்யா தத்தா கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *