இவரைத் தெரியுமா?- பெர்னாண்டோ எய்ரோ

102
சர்வதேச அளவில் செயல்படும் பொழுதுபோக்கு பூங்கா நிறுவனமான பாரக் ரியுண்டாஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த பிப்ரவரியிலிருந்து பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிறுவனத்தில் 12 ஆண்டுகளாக உள்ளார். நிறுவனத்தின் நீண்ட கால செயல் திட்டமான பொதுப் பங்கு வெளியீட்டு (ஐபிஓ) முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்.

குழுமத்தின் துணை நிறுவனமான பேலெஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனத்தில் தலைவர் மற்றும் செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐரோப்பிய பிரிவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் இருந்தார்.

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் மெராஜ் மேலாண்மை பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றவர். மேட்ரிட் வர்த்தக சபையில் சர்வதேச வர்த்தகம் குறித்த உயர்நிலை டிப்ளமோ பெற்றுள்ளார்.

ஈவண்ட் மேனேஜ்மெண்ட், பட்ஜெட், திட்டமிடுதல் குழு போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *