இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இரண்டு முக்கிய பிரபலங்கள் !
வரும் பிப்ரவரி மாதம் இளையராஜாவின் 75வது வயதை முன்னிட்டு ‘ இளையராஜா 75 ‘ என்ற விழா தயாரிப்பாளர் சங்கத்தால் நடத்தப்படுகிறது . சில பிரச்சனைகளின் காரணமாக இந்த நிகழ்ச்சியின் மீது நீதிமன்றத்தில் வழக்கூ இருந்தாலும் நிகழ்ச்சிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல நடிகர் நடிகைகள் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் மற்றும் மத்திய அமைச்சர் பொன் . ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
மேலும் இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொள்கிறார்கள் என்பது ஏற்கனவே குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.