‘ இளையராஜா 75 ‘ நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் !

இளையராஜாவின் 75 வது ஆண்டை கொண்டாடும் வகையில் ‘ இளையராஜா 75 ‘ என்ற நிகழ்ச்சி வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தினங்களில் தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாட்டில் மிகவும் பிரம்மண்டமாக கொண்டாட உள்ளனர். இந்த விழாவில் ஏராளமான வி.ஐ.பி க்கள் வரவிருக்கின்றனர் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் துணைமுதலைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் போது கதிரேசன் , எஸ்.எஸ்.துரைராஜ் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *