shadow

இளம்பெண்ணை விரட்டி விரட்டி முத்தமிட்ட 64 வயது கல்லூரி நிர்வாக இயக்குனர்

கோவையில் எஸ்என்எஸ் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் மீது 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியின் நிர்வாக இயக்குநராக உள்ள 64 வயது சுப்பிரமணியன் என்பவர் 23 வயது இளம் பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை சுப்பிரமணியனுக்கு தெரியாமல் அந்த பெண்ணே ரகசியமாக கேமராவை வைத்து எடுத்துள்ளதாக தெரிகிறது. தற்போது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள் அந்த பெண் தன்னை ஓடி பிடித்து சுப்பிரமணி சில்மிஷம் செய்யும் வீடியோவையும் காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.

ஏற்கெனவே அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலா தேவியும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு பாலியல் குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply