இலங்கை குண்டுவெடிப்பு: ரஜினி, கமல் இரங்கல்

இலங்கையில் இன்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பில் 207 பேர் பலியாகவிருப்பதாக அதிர்ச்சி தரும் செய்தி வந்துள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதேபோல், ‘வன்முறை ஒருபோதும் மனித முரண் பாடுகளுக்கு இறுதி தீர்வு அல்ல. இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீதி வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சமற்ற மற்றும் விரைவாக வகையில் செயல்படும்படி இருக்க வேண்டும்’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *