இலங்கையில் 7ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு! ராஜபக்சேவுக்கு வெற்றி கிடைக்குமா?

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் இருந்து வரும் நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 7-ஆம் தேதி கூடுவதாகவும் அன்றைய தினம் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபட்ச மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்

மேலும் இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 7-ஆம் தேதி கூட்டுவதற்கு அதிபர் மைத்ரீபால சிறீசேனா ஒப்புதல் தெரிவித்ததாகவும் நாடாளுமன்றத் தலைவர் ஜெயசூர்யா கூறியுள்ளார். .

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பெரும்பான்மையை நிரூபிக்க 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 உறுப்பினர்களும், ராஜபட்ச-சிறீசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த நிலையில், விக்கிரமசிங்க கட்சி எம்.பி.க்கள் 6 பேரை ராஜபட்ச தன்பக்கம் இழுத்துக் கொண்டதாகவும் அதனாஅல் ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *