இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக 300க்கும் அதிகமானோர் பலியான நிலையில் மேலும் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து இலங்கையின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் ராணுவ பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது

இந்த நிலையில் இலங்கையில் ஏற்கனவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவில் மட்டும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் இன்றும், இரவு 9 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *