இலங்கையின் அபார பேட்டிங்: டிராவில் முடிந்த டெல்லி டெஸ்ட்

இந்திய, இலங்கை அணிகள் டெல்லி மைதானத்தில் மோதிய 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்கள் கடைசி நாளில் அபாரமாக பேட்டிங் செய்ததால் , இந்த போட்டி டிராவில் முடிந்தது.

இலங்கை அணி வெற்றி பெற 410 இலக்கை இந்திய கேப்டன் விராத் கோஹ்லி கொடுத்த நிலையில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இலங்கை ஒரு கட்டத்தில் தத்தளித்தது. ஆனால் டிசில்வா மற்றும் சில்வா ஆகியோர்களின் சுதாரிப்பான ஆட்டத்தால் இலங்கை அணி ஆட்டநேர முடிவின்போது 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ் – 536/7

இலங்கை முதல் இன்னிங்ஸ் – 373

இந்தியா 2வது இன்னிங்ஸ் – 246/5

இலங்கை 2வது இன்னிங்ஸ் – 299/5

ஆட்டநாயகன்: விராத்கோஹ்லி

தொடர் நாயகன்: விராத்கோஹ்லி

இந்த போட்டி டிரா ஆன போதிலும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற கேப்டன்கள் பட்டியலில் விராத் கோஹ்லி இணைந்தார். இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்குகிறது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *