இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் எலுமிச்சை பழம்

இறைவழிபாட்டின்போது எத்தனையோ பொருட்களை வைத்து வழிபட்டாலும், எலுமிச்சம் பழம் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்

சிவபெருமானின் நேத்ர கனி என்று எலுமிச்சம் பழம் அழைக்கப்படுகின்றன. எலுமிச்சம் பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மிக, மிக முக்கியமானது. மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளிக்கும் எலுமிச்சம் பழம் பல்வேறு வகையான எதிர்வினை தீய சக்திகளை தம்முள் கிரகித்து பஸ்மம் செய்யும் ஆற்றல் கொண்டது.

மேல்மலையனூர் கோவிலுக்கு செல்லும் போது அம்மன் பாதத்தில் எலுமிச்சம் பழங்களை வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். அங்காளம்மன் பாதம்பட்ட அந்த எலுமிச்சம் பழங்கள் நிகரற்ற சக்திகள், சிறப்புகள் கொண்டது. எனவே அந்த எலுமிச்சம் பழங்களை வீணாக்கி விடாதீர்கள். வீட்டுக்கு எடுத்து வந்து உங்கள் திருஷ்டி தீர பல வகைகளில் அவற்றை பயன்படுத்தலாம்.

* வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தின் இரண்டு அரை வட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும். எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.

* எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேற்புறத்தில் தொங்க விட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும்.

* வண்டி வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இதனால் பார்வை திருஷ்டிகளை அறவே தடுக்கலாம்.

* எலுமிச்சம் பழத்தை அரிந்து (இரு பிளவாக) குங்குமத்தில் தோய்த்து அதை இரு கைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட திருஷ்டி விலகும். இது புதிய பொருட்களுக்கு செய்யும் திருஷ்டி கழிப்பு முறைகளுள் ஒன்றாகும்.

* அங்காளம்மன் பாதம்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வதால் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

* 21, 54, 108 எண்ணிக்கையில் சார்த்தப்பட்ட எலுமிச்சம் பழ மாலைகளில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட எலுமிச்சம் பழங்கள் சிறந்த பாதுகாப்பு கவசமாக அமையும். இதை வெளியூர் பயணங்களின் போது கையில் வைத்துக் கொள்வது நல்லதோர் பாதுகாப்பு சக்தியை பெற்றுத்தரும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *