shadow

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விஷால் மனு தள்ளுபடி உறுதியானது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சற்றுமுன் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மொத்தம் 58 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் விஷால் பெயர் இல்லை என்பதால் அவரது கதை முடிந்ததாக கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 14 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து சற்றுமுன் 58 வேட்பாளர்களை கொண்ட இறுதி பட்டியல் வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் விஷால் சார்பில் ஆஜராக வேண்டிய இருவரில் தீபன் மட்டும் தேர்தல் பார்வையாளர்கள் கமலேஷ், அல்கா ஸ்ரீவத்சவா முன் ஆஜராகி, தான் விஷாலை ஆதரிக்கவில்லை என்று வாக்குமூலம் கொடுத்ததால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply