இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 21ஆம் தேதி வெளியிடப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டதால் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 21ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம் இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *