இரு ரயில்கள் மோதிய விபத்தின் சிசிடிவி வீடியோ: பயணிகள் விழுந்தடித்து ஓடி வரும் அதிர்ச்சி காட்சி

தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள காசிகூடா ரயில் நிலையைத்தில் நேற்று நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது லோக்கல் ரயில் ஒன்று மோதிய விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகளும், லோக்கல் ரயிலின் 3 பெட்டிகளும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி வீடியோவை ஆங்கில ஊடகம் ஒன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது லோக்கல் ரயில் மோதுவதும், உடனே லோக்கல் ரெயில் உள்ள இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியே செல்வதும், பயணிகள் அதிர்ச்சியுடன் ரயில் பெட்டியில் இருந்து இறங்கி ஓடுவதும் அந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நேற்றிரவு வரை அப்பகுதி வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், தாமதமாக சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *