shadow

இராணுவத்தில் ஓரின சேர்க்கையை அனுமதிக்க முடியாது: தளபதி

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் ராணுவத்தில் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்க முடியாது ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
எங்களை பழமை வாதிகள் என்று கூறிக்கொண்டாலும் பரவாயில்லை, ஓரின உறவை எங்களால் ஏற்க முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

ராணுவத் தளபதியின் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பு நேற்று டெல்லியில் நடைபெற்றபோது அதில் பேசிய ராவத், ‘ஓரினச் சேர்க்கை உள்பட ஒருசில விஷயங்கள் ராணுவத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட அம்சங்கள் என்றும், ராணுவம் என்பது நிச்சயம் சட்டத்திற்கு மேலான அமைப்பு அல்ல என்றும் ராவத் கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு பின் அவர் இத்தகைய கருத்தினை தெரிவித்துள்ளார்.

நாங்கள் பழமைவாதிகள் தான். நாங்கள் நவீனமயமாக்கப்பட்டவர்களோ அல்லது மேற்கத்திய மயமாக்கப்பட்டவர்களோ இல்லை. ராணுவத்தில் ஓரினச் சேர்க்கை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில உரிமைகள் ராணுவ வீரர்களுக்கு பொருந்தாது. அதேபோல் தான் ஓரினச்சேர்க்கை விஷயமும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply