shadow

இரண்டு வித அட்டகாசமான கெட்டப்பில் அஜித்தின் ஃபர்ஸ்ட்லுக்

அஜித் நடித்து வரும் `விஸ்வாசம்’ படத்தின்ப் படப்பிடிப்பு பிசியாக நடந்து வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது ஐதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறாது. இந்த படப்பிடிப்பில் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், `விஸ்வாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அதிகாலை 3.40 மணியளவில் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் டுவிட்டரில் இந்திய அளவில் பிரபலமாகியும் வருகிறது. வயதான மற்றும் இளமையான தோற்றம் என அஜித் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் இரண்டு கெட்டப்புகளில் உள்ளார்.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

Leave a Reply