இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் மறைவு: விவசாயிகள் கண்ணீர் அஞ்சலி

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 50. கடந்த சில வாரங்களாக புற்றுநோய்க்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன், சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவரது மறைவு கேட்டு தமிழக விவசாயிகள் மட்டுமின்றி இந்திய விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்தனர்

கடந்த 22 ஆண்டுகளில் நெல் ஜெய்ராமன் அவர்கள் 174 வகை பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து அவற்றை மறு விவசாயம் செய்துள்ளார். மேலும் தமிழக விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் சீடராவார்

கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் நெல் திருவிழாவை நடத்தில் அதில் இந்தியாவில் உள்ள விவசாயிகள் பலரை கலந்து கொள்ள செய்து பாரம்பரிய நெல் வகைகளை அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். மத்திய, மாநில அரசுகளின் பல விருதுகளை பெற்ற நெல் ஜெயராமன், தமிழக இயற்கை உழவர் இயக்கம், நமது நெல்லை காப்போம் ஆகிய அமைப்புகளை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *