கவின் இன்ஸ்டாகிராம் போஸ்டர் வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின் சமூகவலைதளத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார்

இந்த கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அப்பா, அம்மாவுக்கு பின்னர் இப்போது வரைக்கும் என்னுடன் இருப்பது நீ மட்டும் தான். இப்போது நம் இருவருக்கும் வயது 30” என்று கூறியுள்ளார்.

கவின் இவ்வாறு கூறியது தனது வீட்டில் இருக்கும் மின் விசிறியை என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கூடிய கவினின் இந்த பதிவை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பதும் பலர் சுவாரஸ்யமான கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கவின் தற்போது லிஃப்ட என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா நடித்து வருகிறார்.

Leave a Reply