இப்படி கேவலப்படுத்திட்டியே! லாஸ்லியா தந்தை ஆத்திரம், கவின் அதிர்ச்சி

இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியா தந்தை, லாஸ்லியாவை கடுமையாக கண்டித்ததால் கவின் உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் கொச்சையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற லாஸ்லியா தந்தை லாஸ்லியாவை கண்டிக்கின்றார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்கு என்ன சொல்லிட்டு வந்த, இப்ப என்ன செஞ்சுகிட்டு இருக்க… தலைகுனிஞ்சி என்னால வாழ முடியாது. இதையெல்லாம் நீ யோச்சியா? என்று ஆத்திரத்துடன் லாஸ்லியாவின் தந்தை கூறுகிறார். இதை வைத்து பார்க்கும்போது வெளியே அவர் எந்த அளவுக்கு உறவினர்களாலும் மற்றவர்களாலும் கேவலப்பட்டிருப்பார் என்று புரிகிறது. ஒரு தந்தையாக அவருடைய ஆதங்கம் சரியானதே என்று தோன்றுகிறது.

முதலில் அபிராமி, பின் சாக்சி, அப்புறம் லாஸ்லியா என பொழுதுபோக்கு காதல் செய்து வரும் கவின் போன்றவர்களுக்கு இதுவொரு நல்ல பாடமாக இருக்க வேண்டும்

//twitter.com/Kuttymaa_/status/1171703225549934592

Leave a Reply