பரபரப்பு தகவல்

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு செல்லவும் இபாஸ் கட்டாயம் என்ற நடைமுறை இன்னும் உள்ளது

மத்திய அரசு இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய போதும் தமிழக அரசு அதனை ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இபாஸ் எடுப்பதில் தளர்வு அளித்தது என்பதும் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்கும் இபாஸ் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இபாஸ் நடைமுறையில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிற மாநிலங்களிலிருந்து வணிகரீதியாக தமிழகம் வருபவர்களுக்கு உடனடியாக இபாஸ் வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் இருந்து வந்த நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் அவர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு புறப்படுவதாக இருந்தால் அவர்களை தனிமைப்படுத்த மாட்டோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த தளர்வு காரணமாக பிற மாநிலங்களிலிருந்து வணிகரீதியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply