astrologyமேஷம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, கிரே
 
 
ராசி குணங்கள்
ரிஷபம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், கிளிப் பச்சை
 
 
ராசி குணங்கள்
மிதுனம்
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். முன்கோபம் குறையும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
ராசி குணங்கள்
சிம்மம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
கன்னி
மறைமுக விமர்சனங்களும், எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா, ரோஸ்
 
 
ராசி குணங்கள்
துலாம்
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், கிரே
 
 
ராசி குணங்கள்
விருச்சிகம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
ராசி குணங்கள்
தனுசு
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்
 
 
ராசி குணங்கள்
மகரம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
ராசி குணங்கள்
கும்பம்
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்
 
 
ராசி குணங்கள்
மீனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். சொத்துப் பிரச்னையில் ஒன்று தீரும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், ப்ரவுன்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *