இன்றைய ராசிபலன்கள் 07/09/2018

மேஷம்
இன்று வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6
ராசி பலன்கள்

ரிஷபம்
இன்று தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
ராசி பலன்கள்

மிதுனம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இறுதியில் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
ராசி பலன்கள்

கடகம்
இன்று உங்களின் பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். ஆனாலும் ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9
ராசி பலன்கள்

சிம்மம்
இன்று மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5
ராசி பலன்கள்

கன்னி
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3
ராசி பலன்கள்

துலாம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின்போதும் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
ராசி பலன்கள்

விருச்சிகம்
இன்று எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். டென்ஷனை குறைத்து வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6
ராசி பலன்கள்

தனுசு
இன்று எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மை நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5
ராசி பலன்கள்

மகரம்
இன்று தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9
ராசி பலன்கள்

கும்பம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3
ராசி பலன்கள்

மீனம்
இன்று குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7
ராசி பலன்கள்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *