இன்றைய ராசிபலன்கள் 05.06.2019

மேஷம்:
இன்று ஒரு உற்சாகமான நாள். தேவையானவற்றை சுலபமாக வாங்கி விடுவீர்கள். சிலருக்கு அறிவுரை வழங்கும் போது கவனமுடன் இருக்கவும். ஏனெனில் பிரச்சினைகள் உங்களுக்கு வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

ரிஷபம்:
இன்று லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

மிதுனம்:
இன்று உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கடகம்:
இன்று தேவையற்ற கவலைகள் நீங்கும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். . தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்:
இன்று உற்சாகமான நாள். ஆர்டர்கள் வருவதில் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:
இன்று பிரச்சினைகள் அற்ற நாள். பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

துலாம்:
இன்று புதிய மாற்றம் உருவாகும் நாள். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

விருச்சிகம்:
இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மகரம்:
இன்று உதவிகள் பெறும் நாள். அனைவரும் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை காணுவீர்கள். விருப்பங்களும் நிறைவேறும். மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:
இன்று சிறப்பான நாள். வினோதங்களை கையாளுவீர்கள். வியாபாரத்தில் வெற்றியுடன் செயல்படுவீர்கள். திட்டங்கள் தீட்டி வெற்றி காணுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்:
இன்று வெற்றிகள் ஏற்படக் கூடிய நாள். துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Leave a Reply