‘இன்று நேற்று நாளை 2’ படத்தில் சூர்யா?

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக அவர் ஹரி, வெற்றிமாறன், மற்றும் கௌதம் மேனன் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

முதல்கட்டமாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தெரிகிறது

இந்த நிலையில் ’இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை எஸ்ஆர் பிரபு அவர்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

ஏற்கனவே இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில் அந்த படத்தை முடித்த பின்னர் அவர் சூர்யா படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது

மேலும் இந்த படம் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply