இன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள்

தமிழ் சினிமாவில் கடந்த 80களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. 80கள் மற்றும் 90களில் இவர் நடிக்காத, நடனம் ஆடாத படங்கள் மிகவும் குறைவு.

சுமாரான கதையம்சம் உள்ள படங்கள் கூட சில்க் ஸ்மிதாவின் ஒரே ஒரு பாட்டுக்காக ஓடிய வரலாறும் உண்டு. தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த சில்க்ஸ்மிதா, ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தபோதிலும், அவருடைய சொந்த வாழ்க்கை துக்கமாகவே இருந்தது. சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சில்க் ஸ்மிதா, பின்னர் திருமண வாழ்க்கை கசந்ததால், அதை உதறிவிட்டு சென்னையில் சினிமா வாய்ப்பை தேடினார்.

நடிகர், இயக்குனர் வினுச்சக்கரவர்த்தி தான் அவரை தனது ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் அறிமுகம் செய்தார். அவருடைய காந்த விழிகள், கவர்ச்சி உதடுகள் தமிழ் சினிமாவை புரட்டி எடுத்தது. தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படினும் இன்று வரை அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுவதுண்டு

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *