இன்று கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 110வது பிறந்த நாள்

சச்சின் தெண்டுல்கரின் மானசீக குருவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமாகிய டான் பிராட்மேன் அவர்களின் 110வது பிறந்த நாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டான் பிராட்மேன், பலரும் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத பல்வேறு சாதனைகளை இன்று வரை தன்னிடம் வைத்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான். அவர் விளையாடுவதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மற்ற பேட்ஸ்மேன்களிடமிருந்து வித்தியாசமானது.

டான் பிராட்மேன் 29 சதங்களும், 13 அரைசதங்களும் அடித்துள்ளார். 50-களை 100-ஆக மாற்றக்கூடிய வித்தையில் பிராட்மேனின் சராசரி 69.05. ‘கிரிக்கெட் கடவுள்’ என்று புகழப்படும் டான் பிராட்மேன் 961 புள்ளிகள் பெற்று அதிகப் புள்ளிகள் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது இந்த சாதனையை இதுவரை யாரும் நெருங்கியது கிடையாது.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் 110-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தன்னிகரில்லா அந்த சாதனையாளனை கௌரவிக்கும் விதமாக பிராட்மேன் கிரிக்கெட் பந்தை விளாசுவது போல் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது கூகுல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *