இன்று அறிமுகமாகிறது சியாமியின் மி பேண்ட் 3: இலவசமாக பெற இதோ ஒரு வழி!

சியோமி நிறுவனத்தின் புதிய பிட்னஸ் வியரபிள் பேண்ட் அதாவது மி பேண்ட் 3 இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து சியாமி தனது நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம் மற்றும் டிவிட்டர் தளத்தில் டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் இந்த மி பேண்ட் 3 குறித்த அம்சங்கள் மற்றும் உடற்பயிற்சியை மையப்படுத்திய திறன்கள் குறித்த தகவல்களும் வெளியாகும் என தெரிகிறது

இந்தியாவில் இதன் விலை ரூ.1500 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மி பேண்ட் 3ஐ இலவசமாக பெறவும் சியாமி நிறுவனம் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி பெங்களூரில் ’ரன் வித் மி’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறிப்பிட்ட தூரத்தை ஓடி முடித்தால் ஒரு ‘மி பேண்ட் 3’ இலவசமாக பெறலாம் என சியாமி அறிவித்துள்ளது.

Leave a Reply